சித்துராஜபுரத்தில் புதிய பஸ் நிறுத்தம்
சித்துராஜபுரத்தில் புதிய பஸ் நிறுத்தம்
விருதுநகர்
சிவகாசி
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரத்தில் புதிய பஸ் நிறத்தம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து வைகோ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கி உள்ளார். இந்த நிலையில் புதிய பஸ் நிறுத்தம் கட்டுமான பணி தொடங்கியது. முன்னதாக நடைபெற்ற பூமி பூஜையில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், சித்துராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் லீலாவதி சுப்புராஜ், ம.தி.மு.க. நகர செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான ராஜேஷ் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story