சுற்றுலா தலங்களுக்கு புதிய பஸ்
சுற்றுலா தலங்களுக்கு புதிய பஸ் இயக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சுற்றுலாத்துறை சார்பில் அரசு போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் சாஸ்தா கோவில் ஆகிய பகுதிகளுக்கு புதிய பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பஸ் வசதி தொடக்க விழா ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். புதிய பஸ்சினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய சேர்மன் மல்லி ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story