கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடியில் திட்டம்


கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடியில் திட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2022 1:21 AM IST (Updated: 13 Oct 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என துணை மேயர் தமிழழகன் கூறினார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என துணை மேயர் தமிழழகன் கூறினார்.

மாநகராட்சி கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

செல்வம் (இந்திய கம்யூனிஸ்டு):-

கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள கழிவறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும் சுகாதார கேடு ஏற்படுத்தும் தற்காலிக பாஸ்ட் புட் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதீபா (ம.தி.மு.க.):- புதிய பஸ் நிலையத்தில் சேதம் அடைந்துள்ள மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் கழிவறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கழிவுநீரை அகற்ற வேண்டும்

பத்மகுமரேசன் (அ.தி.மு.க.):- தரைக்கடை வியாபாரிகளிடம் வரி வசூல் செய்வதில் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். தாராசுரம் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

ஆனந்தராமன் (தி.மு.க.):- கும்பகோணத்தில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

சோடா கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.):- கழிவுநீர் கசிவுகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.

துணை மேயர்:- நிதி வசதிகளை கொண்டு தற்போதுள்ள ஊழியர்களின் உதவியுடன் பொதுமக்களின் அவசர தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. குடிநீர் வினியோகம் விரைவில் சீராகும். புதிய பஸ் நிலையத்தை ரூ.2 கோடியில் மேம்படுத்த தேவையான திட்ட வடிவு தயார் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி வரை சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாநகராட்சி நடவடிக்கைகள் இருக்கும். விரைவில் புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story