போளூரில் புதிய சிமெண்டு சாலை
போளூரில் புதிய சிமெண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை
போளூர்
போளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டில் (2022 -2023) எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் சிமெண்டு சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த சிமெண்டு சாலையின் அனைத்து பணிகள் முடிக்கப்பட்டு இன்று முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிமெண்டு சாலையை திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ஏ.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஏ.ராஜன், போளூர் ஒன்றிய செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன், சேத்துப்பட்டு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், சேத்துப்பட்டு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், நகர செயலாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி சத்யராஜ், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story