புதிய வகுப்பறை கட்டிடம்


புதிய வகுப்பறை கட்டிடம்
x

நாங்குநேரி அருகே ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் கரந்தானேரி பஞ்சாயத்து முதலைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் பணி ்தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அதனைத்தொடர்ந்து தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசின் இலவச மருத்துவ முகாமை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். களக்காடு அருகே மேலதேவநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி, பஞ்சாயத்து தலைவர்கள் செந்தில்வேல், பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நம்பித்துரை, அழகியநம்பி, செல்லப்பாண்டி, வாகைதுரை, நளன், ராமஜெயம், குளோரிந்தாள், வனிதா காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story