ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்


ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சி வெள்ளிக்கிடங்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ரூ.26 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை அடுத்து பள்ளியில் நாகை மாவட்ட உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் போது உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், பள்ளி மாணவிகளை வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைக்க செய்தார். இந்த நிகழ்வை பார்த்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கைதட்டி உதவி கலெக்டரை பாராட்டினர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்விகுமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம்முருகையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன், கோமதி தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ராமலிங்கம், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் இந்திரசித்தன் நன்றி கூறினார்.


Next Story