அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள்


அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள்
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:45 PM GMT)

திருமருகல் ஒன்றியம் கோட்டூரில் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேதம் அடைந்த வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் தலைமை தாங்கினார். திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் வானதி வரவேற்றார். இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 2 ஸ்மார்ட் வகுப்பறைகளையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, திருமருகல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சசிகுமார் நன்றி கூறினார்.


Next Story