ரூ.114 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம்


ரூ.114 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம்
x

மயிலாடுதுறையில் ரூ.114 கோடியில் கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் ரூ.114 கோடியில் கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

பரிசு வழங்கும் விழா

மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மெய்யநாதன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 100 வீரர்- வீராங்கனைகளுக்கு ரூ.41.80 லட்சம் செலவில் பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.52 கோடி

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் தான் விளையாட்டுத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதல்- அமைச்சர் விளையாட்டு கோப்பைக்காக ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக வரலாற்றில் இது அதிகபட்ச நிதி ஆகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மிகச் சிறந்த வீரர்- வீராங்கனைகள் உள்ளனர். இந்த மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் தேசிய, சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் அலுவலகம்

முன்னதாக ரூ.114 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிட பணியை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.45½ கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தையும் அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சிமூர்த்தி, நகரசபை தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story