'தினத்தந்தி' செய்தி எதிரொலி: வடபாதிமங்கலத்தில் புதிய மின் கம்பம் நடப்பட்டது
புதிய மின் கம்பம் நடப்பட்டது
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் புனவாசல் என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் இருந்த அந்த மின் கம்பம், சாலையின் வளைவு பகுதியில் இருந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்றும், அதற்கு பதிலாக சாலையின் வளைவு பகுதியை தவிர்த்து வேறு இடத்தில் புதிய மின் கம்பம் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் கட்டனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.