அமைப்பு செயலாளர் உள்பட புதிய நிர்வாகிகள்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


அமைப்பு செயலாளர் உள்பட புதிய நிர்வாகிகள்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

அமைப்பு செயலாளர் உள்பட புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில், முன்னாள் முதல்-அமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தனது அணி சார்பில் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அமைப்பு செயலாளராக மார்க்கெட் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளராக சுரேஷ் பிரகாஷ், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர்களாக காளிதாஸ், சிவராஜ், சோலை குணசேகரன், இளைஞர் அணி இணைச்செயலாளராக ரவி, செய்தித்தொடர்பாளர்களாக கண்ணன், முடிமண் ராமசாமி, விவசாய அணி துணைச்செயலாளராக பரமசிவன், மகளிர் அணி துணைச்செயலாளராக இசக்கியம்மாள், தலைமைக்கழக பேச்சாளராக இசக்கியப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story