புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

புதுக்ேகாட்டையில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஒ. விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை

புதுப்பெண் தற்கொலை

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரியில் ரேடியாலஜி பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வருபவர் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சங்கீதா. இவரது மகள் லமிகா (வயது 23). இவருக்கும் மணப்பாறையை சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கலப்பு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து அவர்கள் புதுக்கோட்டை மேல 4-ம் வீதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டின் அறையில் உள்ள மின்விசியில் லமிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்.டி.ஓ. விசாரணைபுதுக்கோட்டை, செப்.1-

புதுக்ேகாட்டையில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஒ. விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து லமிகா தாய் சங்கீதா கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் லமிகாவிற்கு திருமணமாகி 3 மாதம் ஆவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story