புதுமாப்பிள்ளை திடீர் சாவு


புதுமாப்பிள்ளை திடீர் சாவு
x
தினத்தந்தி 10 July 2023 1:30 AM IST (Updated: 10 July 2023 5:28 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் உடல்நலக்குறைவால் திருமணமாகி 8 மாதங்களில் புதுமாப்பிளை திடீர் சாவு.

தேனி

கம்பம் நந்தகோபால்சாமி 2-வது தெருவை சேர்ந்தவர் நிவாஸ் (வயது 29). இருசக்கர வாகன பழுது நீக்கும் மெக்கானிக். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டு நிவாஸ் காயம் அடைந்தார். அதன்பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 7-ந்தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிவாசுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கம்பம் வடக்குபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை திடீரென்று இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story