வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி
வடலூர் அருகே திருமணம் ஆன ஒரு மாதத்தில் வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருமணம் ஆன ஒரு மாதத்தில்
வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி
வடலூர் அருகே சோகம்
வடலூர், ஜூலை.1-
வடலூர் அருகே திருமணம் ஆன ஒரு மாதத்தில் வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளி
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வளையகார மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் திருமலைசாமி(வயது 34). தொழிலாளியான இவருக்கும், சந்தியா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமலைசாமி வடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். வடலூர் ஆண்டிக்குப்பம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திருமலைசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடலூர் போலீசார், திருமலைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகிறார்கள்.
திருமணமான ஒரு மாதத்தில் வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் வளையகார மேட்டுக்குப்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.