குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால் புதிய வீடுகள் ஒதுக்க வேண்டும்


குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால் புதிய வீடுகள் ஒதுக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கனூர் சி.எம்.சி. காலனி குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால், புதிதாக கட்டும் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று குறைதீர்ப்பு முகாமில் மனு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

சங்கனூர் சி.எம்.சி. காலனி குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால், புதிதாக கட்டும் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று குறைதீர்ப்பு முகாமில் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்ப்பு முகாம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணைமேயர் வெற்றி செல்வன் முன்னிலை வகித்தார்.

முகாமில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோவை சங்கனூர், சி.எம்.சி. காலனி பொதுமக்கள் அளித்த மனு வில், எங்களது குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன.

மழைகாலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப் பை ஏற்படுத்துகிறது. எனவே நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஏதாவது ஒரு பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

சம்பளம் கிடைக்கவில்லை

வ.உ.சி. விலங்கியல் பூங்காவில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கு ஆறுமுகம் என்பவர் அளித்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021 ஆகஸ்டு மாதம்வரை தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் பணியாற்றி வருகிறேன்.

அவர்களது ஒப்பந்தம் காலாவதியானதால் 13 மாதமாக சம்பளம் வழங்க வில்லை. எனவே தொடர்ந்து பணி செய்து வரும் எனக்கு விடுபட்ட ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

குனியமுத்தூர் சுகுணாபுரத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் அளித்த மனுவில், ஏற்கனவே அளித்த மனுவின் பேரில் வாய்க் காலை சரி செய்தனர்.

தற்போது மழைநீர் செல்ல முடியாதவாறு மண்ணை கொட்டி உள்ளனர். எனவே மண்ணை அகற்றி மழை நீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்பு கட்டிடம்

கோவைப்புதூர் பிரிவு, இ.பி. காலனி குடியிருப்போர் நலச்சங்கத் தினர் அளித்த மனுவில், 92-வது வார்டில் அரசு அங்கீகாரம் பெற்ற மனைபிரிவில் பூங்கா அமைக்க ஒதுக்கிய இடத்தை ஆக்கிர மித்து கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

இது குறித்து ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவை 64-வது வார்டு பெரியார் நகரை சேர்ந்த கொண்டசாமி மற்றும் பலர் அளித்த மனுவில், புலியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாக்கடை வடிகால் வசதி சரியில்லை. அடைப்புகள் உள்ளன.

சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. அதை சரி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

15-வது வார்டு பகுதியில் உள்ள பூங்கா இடத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று இளைஞர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


Next Story