ரூ.19.98 லட்சத்தில் புதிய நூலகம், ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.19.98 லட்சத்தில் புதிய நூலகம், ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா
x

ரூ.19.98 லட்சத்தில் புதிய நூலகம், ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் வடக்கன்குளம் பஞ்சாயத்து வடக்கன்குளம் ராஜேந்திரனார் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டவும், செட்டிகுளம் பஞ்சாயத்து பெருமணலில் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டவும் நெல்லை தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்தார். இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அந்தந்த பகுதிகளில் நடந்தது. வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், சாந்தி சுயம்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஞானதிரவியம் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் யூனியன் துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, வடக்கன்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜான் கென்னடி, துணைத்தலைவர் பாக்கியசெல்வி குமரன், பங்குத்தந்தை ஜூலியான்ஸ், தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக் ஜூட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story