ஐகோர்ட் உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும் - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை உள்பட பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன.
சென்னை,
பார்களுக்கான உரிமம் தொடர்பான டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் எனவும், யாருக்கும் உரிமம் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்களுக்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உள்பட பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story