கால்வாய்களை தூர்வார புதிய எந்திரங்கள்


கால்வாய்களை தூர்வார புதிய எந்திரங்கள்
x

வேலூர் மாநகராட்சியில் கால்வாய்களை தூர்வார புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்வாய்களை தூர்வார மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்திருந்திருந்தனர். இதற்காக 4 மண்டலங்களிலும் பயன்படுத்தப்படும் வகையில் புதிய எந்திரங்கள் வாங்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் கட்டமாக வேலூர் மாநகராட்சிக்கு 2 பொக்லைன் எந்திரங்களும், 3 ஹிட்டாச்சி எந்திரங்களும் வாங்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 ஹிட்டாச்சி எந்திரங்களில் 2 எந்திரங்கள் சிறிய வகை எந்திரமாகும். இது சிறிய அளவிலான கால்வாய்கள் மற்றும் சிறிய தெருக்களில் சென்று தூர்வார பயன்படுத்தப்படும். இது தவிர மாநகராட்சிக்கு கூடுதலாக பொக்லைன் எந்திரங்கள் வாங்கப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.


Next Story