புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்
திருமணமான 4 மாதத்தில் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தார்.
செல்வபுரம்
திருமணமான 4 மாதத்தில் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுப்பெண்
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவா் 20 வயது இளம்பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்தது. இதனால் அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபரை பார்த்து அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். சென்னையில் தங்கி இருந்த அவரை, அவரது பெற்றோர் மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
காதலனுடன் ஓட்டம்
இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பமானார். கடந்த 25-ந் தேதி இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது வீட்டில் இளம்பெண் இல்லை. வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மீண்டும் தனது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.