ஆஞ்சநேயருக்கு அமாவாசை வழிபாடு


ஆஞ்சநேயருக்கு அமாவாசை வழிபாடு
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் ஆஞ்சநேயருக்கு அமாவாசை வழிபாடு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அமைந்துள்ள அபிஷ்ட வரதராஜர் பெருமாள் கோவில் எதிரே தனி சன்னதி கொண்ட ஆஞ்சநேயருக்கு அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் வண்ண மலர்கள், துளசி மாலை, வடை மாலை சாத்தி ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

இதேபோல் நாகக்குடையான் கிராமத்தில் அமைந்துள்ள சீனிவாசன் பெருமாள் கோவில் ஆஞ்சநேயர், கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள என்னை ஆளும் கண்ண பெருமான் கோவிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கும் அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.


Next Story