வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்


வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 25 May 2023 8:43 AM IST (Updated: 25 May 2023 8:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், " வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். சென்னை தவிர ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் மீதமுள்ள 12 மாவட்டங்களுக்கான வளர்ச்சி துறை திட்ட பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story