புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்


புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பேருராட்சியில் மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் பொருட்டு எம்.பி. நிதியில் ரூ.98 லட்சம் மதிப்பில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய், துணை தலைவர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேருராட்சி உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர் வரவேற்றார். தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து, 101 பேருக்கு ரூ.18 லட்சத்து 93ஆயிரத்து 455 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, 57 பேருக்கு இணையவழி இ பட்டாவும், சமூக நலத்துறை சார்பில் 77 பேருக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, மாநில மாணவரணி துணை தலைவர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் பொன்முருகேசன், பாலமுருகன், பார்த்திபன், சிவசுப்பிரமனியன், இளங்கோ, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, செந்தில், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், நகர செயலாளர் மகா இளங்கோ, சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ், யூனியன் கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், நடுவக்குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தகுமார், ஒப்பந்தகாரர் மலையாண்டி பிரபு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, மாவட்ட பிரதிநிதிகள் சந்தியாகு, அலெக்ஸ் பிரிட்டோ, முன்னாள் கவுன்சிலர் சரவணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுந்தர், ஞானஜோதி கிறிஸ்துமஸ், இந்திரா, ஜான்சிராணி, தேவநேசம், மகாராஜன், சாத்தான்குளம் அரசு கல்லூரி முதல்வர் சின்னத்தாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் நன்றி கூறினார்.


Next Story