ரூ.31 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
செல்வமந்தை ஊராட்சியில் ரூ.31 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
திருப்பத்தூர்
நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செல்வமந்தை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு செல்வமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார்.
இதில் ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன், ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி சம்பத், ஒன்றிய இளைஞர் அணி எல்லப்பன், எஸ்.எம்.டி.சதிஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story