ரூ.7 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
விஜயஅச்சம்பாடு கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இட்டமொழி:
இட்டமொழி பஞ்சாயத்து விஜயஅச்சம்பாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வெள்ளத்துரை, கோபாலகிருஷ்ணன், தர்மகர்த்தா முத்துகிருஷ்ணன், முன்னாள் தர்மகர்த்தா சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து மணல்விளை மற்றும் மணப்படைவீடு கிராமங்களில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார தலைவர் கனகராஜ், மகளிர் காங்கிரஸ் நிர்வாகி குளோரிந்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.