எர்ணாகுளத்தில் இருந்து காரைக்குடி, திருவாரூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் சேவை


எர்ணாகுளத்தில் இருந்து காரைக்குடி, திருவாரூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் சேவை
x

எர்ணாகுளத்தில் இருந்து காரைக்குடி, திருவாரூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் சேவை தொடங்குவதற்கு ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

திருவாரூர்

திருவாரூர்:-

எர்ணாகுளத்தில் இருந்து காரைக்குடி, திருவாரூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் சேவை தொடங்குவதற்கு ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

திருவாரூர்-காரைக்குடி

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் 'டெமு' ரெயில் இயக்கப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக இந்த ரெயில் சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி முதல் திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.ஆனால் இந்த ரெயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

இந்த வழிப்பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

வாராந்திர ரெயில் சேவை

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி முதல் சனிக்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் சேவை தொடங்கப்படும் என்றும், இந்த ரெயில் சேவை வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி வரை தொடரும் என்றும் ரெயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல் ஜூன் 5-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர், காரைக்குடி வழியாக எர்ணாகுளத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரவேற்பு

இதில் சனிக்கிழமை 12.35 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது. மறு மார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு எர்ணாகுளத்துக்கு ரெயில் சென்றடையும். திருவாரூர்-காரைக்குடி வழியாக நடைபெற உள்ள இந்த வாராந்திர ரெயில் சேவைக்கு ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க செயலாளர் பாஸ்கரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை

திருவாரூர்-காரைக்குடி வழிப்பாதையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையாக எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சிறப்பு ரெயிலை இயக்க உதவி புரிந்த நாகை செல்வராஜ் எம்.பி. மற்றும் தென்னக, கேரள ரெயில்வே அதிகாரிகளுக்கு நன்றி. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கும், தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story