புதிய ரேஷன் கடைக்கு பூமிபூஜை


புதிய ரேஷன் கடைக்கு பூமிபூஜை
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:47 PM GMT)

புதிய ரேஷன் கடைக்கு பூமிபூஜை

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை அருகே உள்ள விளத்தூர் ஊராட்சியில் பழமையான ரேஷன் கடை இயங்கி வந்தது. இந்த ரேஷன்கடையை விளத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள கிள்ளுக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் ரேஷன்கடை கட்டிடம் இருந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மானாமதுரை தொகுதி தமிழரசி எம்.எல்.ஏ. தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்தை ஒதுக்கி அதற்கான பூமி பூஜை விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வாலகுரு நாதன் துைணத்தலைவர் சந்திரா பாஸ்கரன், தி.மு.க. கிளை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட கிராம மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்ற தமிழரசி எம்.எல்.ஏ. அங்கு குழந்தைகளுக்காக உணவு தயார் செய்யும் இடத்தை ஆய்வு செய்து அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.


Next Story