ரூ.15¼ லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
கழுகுமலையில் ரூ.15¼ லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை இந்திரபிரஸ்தம் தெருவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 ன் கீழ் ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
கழுகுமலை ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். கழுகுமலை அ.தி.மு.க. நகர செயலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டுறவு பண்டகசாலை செயலாளர் கன்னிச்சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், மாவட்ட வர்த்தக பிரிவு காமராஜ், கிளை செயலாளர்கள் பாலமுருகன், நாகராஜ், ஏசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.