ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடை; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடை; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே காவலாக்குறிச்சியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் யூனியன் காவலாகுறிச்சி பஞ்சாயத்து காவலாகுறிச்சியில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி அதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்புச் செயலாளர் சௌ.ராதா, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மத்துரை, ஒன்றிய செயலாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story