ரூ.9 லட்சத்தில் புதிய ரேஷன் கடை; ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்
திசையன்விளை அருகே ரூ.9 லட்சத்தில் புதிய ரேஷன் கடையை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே குமாரபுரம் பஞ்சாயத்து வாழைதோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார். தொடர்ந்து திசையன்விளை பேரூராட்சி சண்முகபுரத்தில் உயர்கோபுர மின்விளக்கை ஞானதிரவியம் எம்.பி. இயக்கி தொடங்கி வைத்தார்.
விழாவில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் கமலா சுயம்புராஜன், நடேஷ் அரவிந்த் கண்மணி நடராஜன், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், குமாரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆனிஷா பயாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.