ஆவரைகுளத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம்; சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்


ஆவரைகுளத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம்; சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
x

ஆவரைகுளத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

ஆவரைகுளத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

ஸ்மார்ட் வகுப்பறை

ராதாபுரம் தொகுதியில் ஆவரைகுளம், அம்பலவாணபுரம், பிள்ளையார்குடியிருப்பு, சிதம்பராபுரம், யாக்கோபுரம், மதகநேரி, சங்கனாபுரம், பெரியகுளம், தெற்கு கருங்குளம் உள்ளிட்ட 14 பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.28 லட்சத்தில் உயர்தர ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். மேலும் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். மேலும் ஆவரைகுளத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

வரலாற்றை படிக்க வேண்டும்

அப்ேபாது அவர் கூறியதாவது:-

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் உயர்தர வகுப்புகளை கொண்டு கல்வி கற்பித்து வருவதே தமிழக அரசின் நோக்கம். அதன் அடிப்படையில் ராதாபுரம் தொகுதியில் 288 பள்ளிகளில் உயர்தர ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க திட்டமிட்டு முதல்-அமைச்சரின் அனுமதியுடன் தொடர்ந்து அமைத்து வருகிறேன்.

மாணவ-மாணவிகளாகிய உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்து தர தயாராக இருக்கிறேன். மேலும் மாணவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் உங்களின் வாழ்க்கையில் முன்னேற நமது முன்னோர்களின் வரலாறுகளை படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரெஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story