புதிய ரேஷன் கடை


புதிய ரேஷன் கடை
x

ராமானுஜபுரம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் ஊராட்சியில் பாபநாசம் தொகுதி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.85 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பொது மக்கள் பயன்பாட்டுக்கு ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையை ெதாடங்கி வைத்தார்.விழாவில் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் கோ. தாமரைச்செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது ரிபாயி, ராமானுஜபுரம் ஊராட்சி தலைவர் கற்பகம் ராஜேந்திரன், பெருமாள் கோவில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க செயலாளர் குமாரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story