புதிய ரேஷன் கடை திறப்பு


புதிய ரேஷன் கடை திறப்பு
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:45 PM GMT)

கடையநல்லூர் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் யூனியன் குலையநேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரைச்சாமிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கிருந்து 2 கி.மீ தூரம் உள்ள இரட்டைக்குளம் கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர்.

அந்த கடையில் மொத்தம் 805 குடும்ப அட்டைகள் உள்ளதால், பொருட்கள் வாங்கும்போது, அதிக கூட்டத்தினால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய வேண்டியது உள்ளது என உணவுத்துறை அமைச்சருக்கு, யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ் கோரிக்கை மனு கொடுத்தார்.

அதன் அடிப்படையில் துரைசாமிபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை செயல்படும் விதத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதை துரைச்சாமிபுரம் நாடார் உறவு முறை கட்டிடத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மா.செல்லதுரை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ், துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு துரைச்சாமிபுரத்தில் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.



Next Story