ரூ.5½ கோடியில் புதிய சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

ரூ.5½ கோடியில் புதிய சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி
மானூர் யூனியன் சம்பூத்து கிராமத்தில் நபார்டு கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.5½ கோடி மதிப்பில் சம்பூத்து சாலை, துலுக்கர்பட்டி முதல் வல்லவன்கோட்டை சாலை, பேட்டை- திருவேங்கடநாதபுரம் சாலை மற்றும் இதரச்சாலைகள் தரம் உயர்த்துதல் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் வடக்கு விஜயநாராயணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் இ.நடராஜன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், உக்கிரன்கோட்டை பஞ்சாயத்து தலைவர் ஆர்.அரைஸ், மாநகர துணைச்செயலாளர் பிரபு, கவுன்சிலர் இஸ்மாயில் நிர்வாகி தர்மர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






