ரூ.1 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி


ரூ.1 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி
x

முக்குறும்பூர் ஊராட்சியில் ரூ.1 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியை நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

திருக்கடையூர்;

செம்பனார்கோவில் அருகே முக்குறும்பூர் ஊராட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் மீனா, ஊராட்சி தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, திருச்சம்பள்ளி வல்லம் ஊராட்சி முதல் முக்குறும்பூர் ஊராட்சி வரை 3 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிதாக சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு கிராமப்புற சாலைகள் அமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. அந்த வகையில் தற்போது திருச்சம்பள்ளி வல்லம் ஊராட்சி முதல் முக்குறும்பூர் ஊராட்சி வரையிலான பணி தொடங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் தி.மு.க. தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக், ஒன்றியக்குழு உறுப்பினர் சாந்தி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story