நவீன வசதிகளுடன் ஆண்டாள் கோவில் யானைக்கு புதிய தங்குமிடம்
நவீன வசதிகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானைக்கு புதிய தங்குமிடம் தயார் நிலையில் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா யானை தற்போது தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ணன் கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யானைக்கு சகல வசதியுடன் கிருஷ்ணன் கோவிலிலேயே தங்குவதற்கு புதிய தங்குமிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நவீன வசதிகளுடன் ராம்கோ நிறுவனம் ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய தங்குமிடம் அமைத்து தந்துள்ளது. மேலும் தங்குமிடத்தில் யானை குளித்து மகிழும் விதமாக 12 ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் யானை தங்குமிடம் திறக்கப்பட உள்ளது. இங்கு பெரிய அளவிலான 2 மின்விசிறிகளும் அமைக்கப்பட்டுள்ளன. யானை தங்குவதற்காக புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தங்குமிடத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.