புதிய போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பதவி ஏற்பு


புதிய போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பதவி ஏற்பு
x

ராணிப்பேட்டை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பதவி ஏற்ற்றார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தீபா சத்யன் சென்னை கட்டுப்பாடு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கிரண் ஸ்ருதி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு, தனது பணியை தொடங்கினார்.

கிரண் ஸ்ருதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்த இவர் 2018-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இதற்கு முன்பு திருவண்ணாமலை, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ளார். கடைசியாக சென்னை சைபர் கிரைம் பிரிவில் துணை கமிஷனராக பணிபுரிந்து மாறுதலாகி வந்துள்ளார்.


Next Story