புதிய ஆலய இறை ஒப்படைப்பு நிகழ்ச்சி
செய்யூர் கிராமத்தில் புதிய ஆலய இறை ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கிராமத்தில் தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம், செய்யூர் குருசேகரம் சார்பில் சி.எஸ்.ஐ. ஊழியர் ஜெயராஜ் நினைவு புதிய ஆலய இறை ஒப்படைப்பு நிகழ்ச்சி நடந்தது. சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேராயரம்மா யமுனா ஜார்ஜ் ஸ்டீபன், துணைத் தலைவர் எஸ்.அசோக்குமார், செயலர் மேனியல் எஸ்.டைட்டஸ், பொருளர் ஆர்.யேசுதாஸ், பேராயரின் சேப்ளின் ஜி.எர்னஸ்ட் செல்வதுரை, மத்திய வட்டார தலைவர் எல்.கதியோன் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யூர் குருசேகர தலைவர் ஜி.பால் தயானந்தன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ. ஊழியர் ஜெயராஜ் நினைவு புதிய ஆலயத்தை சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, ஏழைகளுக்கு வேட்டி, சேலை, போர்வை, சலவை பெட்டி ஆகியவற்றை வழங்கி பேசினார். செய்யூர் எஸ்.ராஜேஷ் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்யூர் குருசேகர ஆயர் டி.கனகராஜ் நன்றி கூறினார்.