நாட்டரசன்கோட்டையில் புதிய மின்மாற்றி
நாட்டரசன்கோட்டையில் புதிய மின்மாற்றி திறக்கப்பட்டது
சிவகங்கை
சிவகங்கை மின் கோட்டம், நாட்டரசன்கோட்டை பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பொன்நகரில் அதிக மின் பழு மற்றும் குறைந்த மின்னழுத்த குறைபாட்டினால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.6 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த புதிய மின்மாற்றியை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறும் போது:-
இந்த மின்மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 200 வீட்டு மின் இணைப்பு நுகர்வோர்களும் மற்றும் விவசாய மின் இணைப்பு நுகர்வோரும் பயன்பெறுகிறார்கள். இவர்களுக்கு சீரான மின்வினியோகம் வழங்கப்படும் என்றார்.. இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் அன்புநாதன்(காளையார்கோவில்), காத்த முத்து(சிவகங்கை), உதவி மின் பொறியாளர், நாட்டரசன் கோட்டை, மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.