புதிய வால்வு அமைக்கும் பணி நிறைவு


புதிய வால்வு அமைக்கும் பணி நிறைவு
x
தினத்தந்தி 14 Aug 2023 8:00 PM GMT (Updated: 14 Aug 2023 8:01 PM GMT)

புதிய வால்வு அமைக்கும் பணி நிறைவு

கோயம்புத்தூர்

வால்பாறை

சோலையாறு அணை பகுதியில் 2 மின் நிலையங்கள் உள்ளன. அதில் மானாம்பள்ளியில் உள்ள முதலாவது மின் நிலையத்துக்கு தண்ணீர் திறக்கும் வால்வு, உருளிக்கல் எஸ்டேட்டில் உள்ளது. இந்த வால்வு மூலம் கடந்த 1-ந் தேதி மின்நிலையத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது திடீரென ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வால்வு மற்றும் உபகரணங்கள் உடைந்து விழுந்தன. ஆனாலும், மின் நிலையத்துக்கு தண்ணீர் செல்லும் பணி பாதிக்கப்படவில்லை. எனினும் தண்ணீரின் அளைவை கூட்டவோ அல்லது குறைக்கவோ தேவை என்பதால் அந்த வால்வை புதுப்பிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்டு முதல்முறையாக இந்த சம்பவம் நடந்து உள்ளதால், அங்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய வால்வு அமைக்கும் பணி நடந்தது. மேலும் சுரங்க பாதையில் உடைந்த வால்வின் பாகங்கள் ஏதேனும் உள்ளதா? என்று நேரில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த பணி முடிந்ததால், நேற்று முதல் புதிய வால்வை பயன்படுத்தி மின் நிலையத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story