புதிய ரக தென்னங்கன்றுகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்

5 ஆண்டில் பலன் தரும் புதிய ரக தென்னங்கன்றுகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
வாணாபுரம்
5 ஆண்டில் பலன் தரும் புதிய ரக தென்னங்கன்றுகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது. இங்கு 'அரசம்பட்டி' என்னும் புதிய ரக தென்னை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த தென்னை கன்றுகள் குறுகிய காலத்தில் 5 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும்.
ஒரு மரத்தில் சாதாரணமாக 125 முதல் 150 தேங்காய்கள் வரை காய்க்கக்கூடிய ரகமாகும்/ எதிர்வரும் பருவ கால மழையை பயன்படுத்தி திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வகையான தென்னங்கன்றுகளை நடவு செய்து அதிக அளவில் பயன்பெறலாம் என்று வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story