தூய்மை பணிக்கு புதிய வாகனங்கள்


தூய்மை பணிக்கு புதிய வாகனங்கள்
x

செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணிக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிக்காக 12 பேட்டரி வாகனங்கள், ஒரு மினி லோடு ஆட்டோ இயக்கம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையாளர் சுகந்தி முன்னிலையில் நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் ரஹீம் ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் பேபி ரஜப் பாத்திமா, நகராட்சி கணக்காளர் கண்ணன், சுகாதார பணிகள் மேற்பார்வையாளர் முத்துமாணிக்கம், காளியப்பன் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story