அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு புதிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இட்டமொழி:
நாங்குநேரி அரசு தாலுகா மருத்துவமனையில் பொதுமக்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் சுத்தமான குடிதண்ணீர் மற்றும் வெந்நீர் இல்லாமல் சிரமப்படுவதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் நீர் வழங்கி எந்திரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தையும் மருத்துவமனை டாக்டர்களிடம் நேரில் வழங்கினார்.
பின்னர் நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, அங்கு இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை பார்வையிட்டு புதிய சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்வதாகவும் பள்ளி வளாகத்தில் புதிய பேவர்பிளாக் சாலை அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, வட்டார தலைவர்கள் வாகைதுரை, ரவீந்திரன், நளன், நிர்வாகிகள் சுந்தர், எம்.எம்.ராஜா, வசந்தா, உடையார், விமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நாங்குநேரி யூனியன் பாப்பான்குளம் பஞ்சாயத்து மாங்குளம் வடக்கு தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் வசதி பணிகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
தொடர்ந்து களக்காடு அண்ணாசிலை அருகே நவீன குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைப்பது தொடர்பாக நாங்குநேரி தாசில்தார் விஜய்ஆனந்த், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், நகராட்சி ஆணையாளர் பார்கவி, நகர தி.மு.க. செயலாளர் மணிசூரியன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.