புத்தாண்டு கொண்டாட்டம் : பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடல்


புத்தாண்டு கொண்டாட்டம் :  பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடல்
x

பாதுகாப்பு நடவடிக்கையாக காமராஜர் சாலையின் இருபுறமும் மூடப்பட்டுள்ளது

சென்னை ,

ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

இந்த நிலையில் சென்னை ,மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடப்பட்டது . பாதுகாப்பு நடவடிக்கையாக காமராஜர் சாலையின் இருபுறமும் மூடப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியிலிருந்து கலங்கரை விளக்கம் வரை உள்ள சாலை முற்றிலுமாக மூடப்பட்டது.

1 More update

Next Story