நெல்லையில் புதுமண தம்பதி வந்த கார் குளத்தில் கவிழ்ந்து விபத்து..!
நெல்லையில் புதுமண தம்பதி வந்த கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வடக்கு தெருவை சார்ந்த சீனிவாசன்(25)இவர் விருதுநகரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி இந்திரா.(23)இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில் நேற்று மாலை இவர்களுக்கு சொந்தமான காரில் சிவந்திபுரம் கஸ்பா பகுதியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு வந்தனர்.
வரும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சிவந்திபுரம் அலங்கரி அம்மன் குளத்தில் கவிழ்ந்தது.உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த சிலர் விரைந்து சென்று அவர்களை மீட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story