உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலிக்கு வெட்டு


உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலிக்கு வெட்டு
x

நாட்டறம்பள்ளி அருகே உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனத்தியூர் பனம்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40), பெங்களூரு பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார் தன்னுடைய கள்ளக்காதலி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு மருமகன் மற்றும் உறவினர்கள் வருவதாகக்கூறி உல்லாசத்திற்குவர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அருகில் இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story