தெருவில் குப்பைகளை கொட்டினால் அபராதம்


தெருவில் குப்பைகளை கொட்டினால் அபராதம்
x

சோளிங்கரில் தெருவில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சன்னதி தெருவில் நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டும், பொதுமக்கள் குப்பைகளை தெருவில் கொட்டிவைத்தனர். சில நாட்கள் குப்பைகள் அகற்றப்படாததால் மழையில் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசி வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் நகராட்சி ஆணையர், தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்றி தூய்மை செய்தார். மேலும் குப்பை தொட்டி அருகே வண்ணகோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், சாலையில் கொட்டினால் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் என தெறிவித்தார். நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story