நீலகிரி மாவட்டத்தில் ஆக்கி விளையாட செயற்கை புல்வெளி மைதானம்


நீலகிரி மாவட்டத்தில்  ஆக்கி விளையாட செயற்கை புல்வெளி மைதானம்
x
தினத்தந்தி 20 May 2022 11:43 AM GMT (Updated: 20 May 2022 11:50 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் ஆக்கி விளையாட செயற்கை புல்வெளி மைதானம் அமைக்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி

குன்னூர்

ஆக்கி நீல்கிரிஸ் அமைப்பின் சப் ஜூனியர் ஆக்கி அணியினர் தேசிய ஆக்கி போட்டியில் 2-ம் இடம் பிடித்தனர். இவர்கள் ஊட்டி வந்திருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.துணை ஜனாதிபதிக்கு, சங்க நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினார்கள். அப்போது நிர்வாகிகள் துணை ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில், நீலகிரி மாவட்டத்தில் செயற்கை புல்வெளி மைதானம் இல்லை. இந்த மைதானத்தை அமைத்துத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். செயற்கை புல்வெளி மைதானம் இருந்தால் ஆக்கி விளையாட்டு வீரர்கள் நன்கு விளையாடி பயிற்சி பெற முடியும். எனவே நீலகிரி மாவட்டத்தில் செயற்கை புல்வெளி மைதானம் அமைத்து தர வேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது. அதற்கு அவர் தமிழகவனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் இதற்கான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆக்கி நீல்கிரிஸ் அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன், துணைத்தலைவர் சுரேஷ் குமார், பொருளாளர் ராஜா, நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story