அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி


அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி
x
தினத்தந்தி 20 May 2022 1:08 PM GMT (Updated: 20 May 2022 1:20 PM GMT)

காயல்பட்டினத்தில் அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் 3 நாட்கள் அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி நேற்று தொடங்கியது. போட்டியானது லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை மேற்கு ெரயில்வே அணி, சென்னை பி.எஸ்.அப்துர் ரகுமான் யுனிவர்சிட்டி அணி, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, சென்னை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழக தபால் துறை அணி, தென்னக ெரயில்வே, மங்களூர் ஆழ்வாஸ் பல்கலைக்கழக அணி, கேரளா பைவாஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மேற்கு ெரயில்வே அணியும், கேரளா பைவ்ஸ் அணியும் விளையாடினார்கள். இதில் மும்பை அணி 34-35, 35-25, 35-24 என்ற புள்ளிகளில் வென்றது.

2-வது போட்டியில் சென்னை அப்துர் ரகுமான் பல்கலைக்கழக கிரஸன்ட் அணியும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் மோதியது. இதில் கிரசன்ட் பல்கலைக்கழக அணியினர் 31-35, 35-22, 25-27 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர். 3-வது போட்டியில் மங்களூர் ஆல்வாஸ் பல்கலைக்கழக அணியும், தமிழ்நாடு தபால்துறை அணியும் விளையாடியது. இதில் மங்களூர் அணி 35-28, 35-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story