காவலில் எடுத்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்து சென்றனர்


காவலில் எடுத்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்து சென்றனர்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோைவயில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காவலில் எடுத்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்துச்சென்றனர். முன்னதாக 2 பேரை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

கோயம்புத்தூர்

கோவை

கோைவயில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காவலில் எடுத்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்துச்சென்றனர். முன்னதாக 2 பேரை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அந்தப்பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்து வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவ்பீக், உமர் பாரூக், ஷெக் இதயத்துல்லா, சனாபர் அலி, பெரோஸ்கான் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

ஜமேஷா முபின் வீடு

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்களில், முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது தவ்பீக், முகமது நவாஸ், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் உயிரிழந் ஜமேஷா முபின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசிய கூட்டம் நடத்திய கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அது தொடர்பாக விசாரணை நடத்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் முகமது ரியாஸ், முகமது தவ்பீக், முகமது நவாஸ் உள்பட 4 பேரை ஜமேஷா முபின் வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

சத்தியமங்கலத்தில் விசாரணை

அதுபோன்று ஜமேஷா முபின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடத்திய கூட்டத்தில் சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா உள்பட பலர் பங்கேற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுது. எனவே அவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அங்குள்ள ஆசனூர், கடம்பூர் வனப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்துதான் ரகசிய கூட்டம் நடத்தப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2 பேரையும் அந்த பகுதிக்கு அழைத்துச்சென்று, கூட்டம் நடத்தப்பட்ட இடம், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கூட்டத்தில் பங்கேற்வர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை அழைத்துச்சென்றனர்

இந்த விசாரணை முடிந்ததும் பின்னர் 2 பேரையும் கோவை அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால் காவலில் எடுத்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை கோவையில் இருந்து வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்துச்சென்றனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த வழக்கில் காவலில் எடுக்கப்பட்ட 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதிய அளவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவர்களின் விசாரணை வருகிற 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் இன்னும் சில விசாரணை நடத்தப்பட உள்ளதால் 6 பேரும் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்டிந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


Next Story