குன்னூரில் இரவு நேரங்களில் மழை:ரேலியா அணை நிரம்பியது-மக்கள் மகிழ்ச்சி


குன்னூரில் இரவு நேரங்களில் மழை:ரேலியா அணை நிரம்பியது-மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 6 July 2023 1:00 AM IST (Updated: 6 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் நகரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை நிரம்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

நீலகிரி


குன்னூர்


குன்னூர் நகரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை நிரம்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.


43.7 அடி கொள்ளளவு


குன்னூர் நகராட்சியின் முக்கிய குடி நீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணையிலிருந்து நகராட்சியின் 30 வார்டுகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


ரேலியா அணை ஆங்கிலேயர் காலத்தில் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டப்பட்டது. இதனால் இதன் கொள்ளைவு 43.7 அடியாக உள்ளது.


அணை நிரம்பியது


பருவ மழை காலத்தில் அவ்வப்போது அணை நிரம்பி வழிவது உண்டு. அணையிலிருந்து வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைத்து அதனை வறட்சி காலத்தில் மக்களுக்கு வழங்க வசதியாக அணையை ஒட்டி தடுப்பணை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் ரேலியா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. ரேலியா அணை நிரம்பியதால் குன்னூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.



Next Story