நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்

நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்
x

நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ராமச்சந்திரகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நடந்து வருகிறது. இந்த முகாமில் மாணவர்களுக்கு பொது சுகாதார மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் ரா.கருணாநிதி தலைமை தாங்கினார். காட்டுக்காநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேணு முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் என் சுப்பிரமணி வரவேற்றார். இதில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கசில்தா மோனிகா, சுகாதார ஆய்வாளர் கே.வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். முடிவில் உதவி அலுவலர் தசக்குமார் நன்றி கூறினார்.

Next Story